Vinoth Kannan   (Vinoth Kannan. J)
73 Followers · 25 Following

read more
Joined 20 August 2020


read more
Joined 20 August 2020
18 APR AT 0:18

காகித கப்பலாக என் காதல்
மடித்து கிழித்து வடிவமைத்தாய்
அதை நீயே நீரில் மிதக்க விட்டாய்
தட்டி தட்டி மூழ்கடித்தாய்
இறந்தும் மிதக்கிறேன்
நீ குழந்தையாகி குதூகலிக்க

மழை நின்ற பின்னும் - உன்
(காதல்) மழை,நின்ற பின்னும்...

-


3 APR AT 13:45

நீர்க்குமிழிகளே...
ஹே நீர்க்குமிழிகளே
ஏன் மேல் எழும்புகிறாய்

கனவுகளில் வரும் கவிதைகளே
ஏன் எழுத்துக்களாய்
என்னில் விரிகிறாய்

இலைகளை இசைக்கும் பனிக்காற்றே
இதழ் வரிகளின்
வலிகளில் தெரிகிறாய்

எண்ணம் எழுத்து
வண்ணம் வானம்
புவி எங்கும் உன் பிம்பம்
அதை காணத் தானோ
இவை துள்ளும்
இதை சொல்லத் தானே
நான் இன்னும்
இசைப்பேனோ

அழு குரலில்
என்னை அழைக்கிறாய் தேவதையே
என் உயிர்த்துளியே
இவை (நீ) தானே (நீயே) என் மகளே.!

-


29 MAR AT 6:52

ஆகாயமே எல்லையில்லை
அவள் வானில் போகும் காதல்

நீரோடைக்குள்ளே வாழும்
கூலாங்கல்லாய் நானும்

நீந்தி அடைய முடியா
கோபுர கலசம் நீயே

தீராத சோகம் நாளும்
தீயாக தேகம் வேகும்

நீரோடை வற்றிப் போயும்
நீங்காத கல்லாய் நானும்

நாள்தோறும் வாழும் எந்தன்
வானுயரா காதல் போலும்

வாழ்வேனே நானும் நானும்

-


26 MAR AT 1:35

உறக்கம் ஒன்றே
உறங்காமல் என்னை
உருண்டோடச் செய்கிறது
உன் நினைவுக்குள் ♥️

-


26 MAR AT 0:46

அழுகனும்னு தோணுது
தனியா அழுகவும் பிடிக்கல
யார்கிட்டயும் சொல்லி அழனும்னும் தோனல
இதுக்கு பேரு தான் மெச்சுரிட்டியா?

-


5 MAR AT 13:37

உலகினை மறந்து
உயர்திணை ஒன்று
உலவுது உன் பின்னாடியே...

அஃறிணை என்று
அலட்சியம் கொண்டு
விலகுதல் உன் நியாயமோ?

விலகிச் சென்றாலும்
உன் பின்னே தொடர
துடிக்குது என் நாடியே...

துடிக்கும் விநாடி
ஒவ்வொரு துடிப்பிலும்
உன்னை பண்பாடியே

உன் பெயரை
இசைக்குமென் சொல்லாலயே... அஃது

உலகினை மறந்து
இசைக்குமென் சொல்லெ.

-


22 FEB AT 22:32

விழித்திருந்தாள்,
என் விரல் வழியே
வந்தெழுந்தாள்,
என் வலி அனைத்தையும்
உடன் ரசித்தாள்.
தனிமை எனும் தள்ளாட்டத்தில்
தடம் பிரளாமல்...
அவள் நினைவென்னும்
வார்த்தை வழியே
என்னை மீட்டெடுத்தாள்.

தனித்துவக் கவிதையாய் - அவள்

-


20 FEB AT 22:34

என் மனதில்
அவள் நினைவின் ஆழம்
என்னவென்று

-


5 FEB AT 0:53

துரோகிகள் நடமாடும்
இவ்வுலகில்
நண்பனாக உன்னை
நம்பும் நான் - நிழல்

-


23 DEC 2023 AT 1:16

உயிரில் வண்ணம் தொட்டு
கனவில் கண்ணைத் தட்டும்
கருப்பு வெள்ளை படமாக
நீயானாய்

உன்னால் தூக்கம் கெட்டு
வாடும் ரோஜா மொட்டு
நானானேன்

இது போதாதடி
இன்னும் வேணுமடி

உன்னைக் கண்ட கண்ணின்
வலி கொஞ்சம்

அதை எண்ணி ஏங்கும்
நெஞ்சின் வலி
கெஞ்சும்

இன்னும் நான் என்ன சொல்ல

தீயாய் சுட்ட
உன் வார்த்தை வலி
என் தேகம் எங்கும்
பற்றிக் கொண்டு கொல்ல

தூரம் சென்ற
தூக்கத்தை நான் வெல்ல

-


Fetching Vinoth Kannan Quotes