Venkatesh   (Venkatesh)
310 Followers · 60 Following

read more
Joined 3 June 2020


read more
Joined 3 June 2020
6 MAY AT 10:15

மைவிழியோரம் இழைந்தோடும்
மையலை ரசித்திடவா..
செவ்விதழ் வழியோரம் வழிந்தோடும்
செந்தேனை ருசித்திடவா..
கன்னல் கதுப்புகள் வெளியோரம்
வளைந்தாடும் வாசநறுங்
கூந்தலில் வசித்திடவா..
குழம்பி மனம் தவிக்குமுன்னே..
நின்று சொல்லடி சொப்பனமே,
வாழுங்காலந்தோறும் உயிர்காதல்
என்றும் உனக்கு அர்ப்பணமே.

-


15 APR AT 8:00

பூவுக்குள் ஒளிந்திருக்கும்
வாசத்தை முகர்கிறாய்
நகராமலேயே நீயும்..
பூவைக்குள் ஒளிந்திருக்கும்
நேசத்தை நுகர்கிறேன்
பகராமலேயே நானும்.

-


7 APR AT 15:48

தடையேது இனி..
படையெடுப்புச் செய்யாமலே
நடை போகும் வேளையிலே..
எடை பார்க்கும் சாக்கிலே
சூட்சுமமாய் இடை பிடிக்க
கடைபிடிக்கும் தந்திரம்
அறிவேனே நானும் ஆருயிரே.

-


7 APR AT 14:59

விந்தியப் பூக்கள் சிந்திய வேளை..
இளந்தண்டு இடைகொண்ட
இந்த இளம்பூ இனிதாய் பூக்கவே
இளஞ்சூரியனும் இதமாய்
மலையிடை தேடிவந்து
ஒளிர்கின்றானோ ஒருமனதாய்.

-


2 APR AT 7:26

அஞ்சனம் மேவிய
விழிகள் பெரும் போதையா..
நறவூறும் சிவந்த
அதரங்கள் பெரும் போதையா..
ஐயாறு தினங்களும்
ஐயங்கொள்கிறேன் ஐந்திணையிலும்..
ஐங்கணை தொடுக்கும்
ஐயள் இவளை அழகுறக் காண்கையில்.

-


30 MAR AT 12:29

அசைந்தாடும் மயில் இவளைக் கண்டு வான்
மிசைந்தாடும் கார்முகிலும் தண்பெயல் தூவ துள்ளி
இசைந்தாடும் நெஞ்சமும் இவனது அன்றோ.

-


23 MAR AT 12:56

மஞ்சளில் மதிமயங்கி
வேகத்தைக் குறைத்தவன்..
சிவப்பைக் கண்டவுடன்.. சட்டென
நின்றுவிட்டேனடி நின்னருகில்.
பைய நகும் பைங்கிளியே..
சற்றே பின்பு தான்..
பச்சையும் ஆனதடி பரிச்சயமாய்..
இனித் தடையேதுமில்லாது
உந்தன் விழிப் பாதையையே
மாறா வழிப் பாதையாக்கி
எந்தன் நெஞ்சமும்
நிச்சயமாய்ச் சேர்ந்திடுமே
நேசமாய்.. நிறைவாய்..
நிரந்தரமாய்.. உந்தன்
நிகர்த்த நெஞ்சந்தனிலே.

-


22 MAR AT 9:24

பகல் முழுசும் தேடினேன்..
கடைசியில இப்போ தான் கிடைச்சது.
என்னனு சொல்லுங்க?

-


16 MAR AT 18:52

இலைகள் இல்லாமல்
இருக்கலாம், ஆனால்
மீண்டும் கிளைக்கும்
என்றிருக்கும் வரை
அதன் மாண்பு
ஒருபோதும் குன்றுவதில்லை.

-


16 MAR AT 15:50

சொட்ட நனைகிறேனடி..
உன் வட்டக்கரு விழித் தூறலிலே.

-


Fetching Venkatesh Quotes