Nithya BalaChandhar   (நித்யா பாலசந்தர்)
4 Followers · 5 Following

read more
Joined 30 March 2024


read more
Joined 30 March 2024
47 MINUTES AGO

மாற்ற இயலாத கல்மனம்
கொண்ட மனிதர்களை...
இலகுவாய் கடந்து செல்வதே
வாழ்வின் ஆகச்சிறந்த
நிம்மதியான தருணம்...!

-


57 MINUTES AGO

காட்சிப் பிழையாய்
இருந்துவிடக்கூடாது
என்ற தவிப்பு...
அந்த பிஞ்சு மனதிற்குள் நீள்கிறது...
கனவினில் சண்டையிடாத
அப்பா அம்மா...!

-


6 MAY AT 9:59

என்னில் நீ பார்க்கும்
குணங்கள் அனைத்தும்...
உன்னில் என்னைப் பற்றி
நீ வரையறை செய்த
எண்ணங்களின் பிரதிபலிப்பு...!

-


5 MAY AT 19:57

மனதில் நினைத்ததை
வெளியில் சொல்ல இயலாமல்...
கசப்பான புன்னகையை
வலிய வரவழைத்து...
சில கனமான நொடிகளை
நாம் போகிற போக்கில்
கடக்க வேண்டி உள்ளது...!

-


5 MAY AT 0:36

உன்னுள் இருக்கும் உலகம் அழகானால்...
உன்னைச் சுற்றி இருக்கும்
உலகமும் அழகாய் மாறும்...!

-


4 MAY AT 16:48

காதலால் நீளட்டும்...
பிரிந்திருக்கும்
நம் இருவருள்ளும் வளரும்
தீராக் காதல்...
கனவுகளின் வழி...
உயிர் தீண்டிச் செல்லட்டும்...!

-


4 MAY AT 16:40

எனக்குள் வாதிட்டு
தோற்ற பொழுதுகளில்
கிடைத்த தன்னம்பிக்கை தான்
இன்று எனக்காய் நான் பேசும் தருணங்கள்...!

-


1 MAY AT 23:37

'உன்னால முடியாது' என்று பிறர்
என்னை பரிகசித்தப் பொழுதுகளை...
வலியச் சென்று வென்று
காட்டும் தருணங்களில்...
அந்த வான் வீதியில்...
மேகக் கூட்டங்களுக்கு நடுவே...
உயரப் பறக்கும் ராஜாளியாய்
பிடரி சிலிர்க்க...
சிறகடித்து பறக்கிறேன்...!

-


30 APR AT 19:49

அவ்வண்ணங்களின் வழி...
என் எண்ணங்கள் கூட
அழகாயிற்று..!

-


29 APR AT 7:29

வடுக்கள் நிறைந்த ஆழ்மனதில்...
வலி மிகுந்த கடந்தகால நினைவுகள்
ஆயிரம் இருக்கும்...!

-


Fetching Nithya BalaChandhar Quotes