நெருக்கமும்
தயக்கமும்
ஒரே அறையில்
கொஞ்சம் எல்லை தாண்டு
விசாலமான அழகினை காண...-
இரவின் மடியில் குளிர்
இதழின் அழகில் தளிர்
பதமாய் வருடும் கனவுகள்
இதமாய் துணைக்கு நினைவுகள்-
வேதனை சொல்ல வார்த்தையில்லை
போதனை என்ற ஞானமில்லை
சோதனைக்கு சினம்
மகுடம் சூட்ட
சாதனை என எதை சொல்ல
முக பாவனை தவிர...-
கண்களில் இல்லா ஒளி
இதயத்தில் இல்லா துடிப்பு
ஆயினும் ஒரு உணர்வு
அமைதியில் உறைகிறது.
கல்லென நினையாத நெஞ்சத்தின்
கலை உலக பார்வையில்
இவளொரு அழகிய தேவதை-
நினைவுகளைத் தான்
தழுவி கொள்கிறேன்
ஏனோ நீ தொலைவான பின்பு
அவை என்னை தொழுது அழுகின்றன
நான் அதில் கரைந்து ஆறுதலாகிறேன்-
Every thunderclap, every raindrop that falls,
Is a note in the anthem that nature recalls.-
மணக்கும் நினைவுகள்
மனதின் கனவுகள்
சுகத்தின் சுவடுகள் தாங்கி வருவது
சுமக்கும் விழிகளில் வெட்கமாக...-
தொடர் ஓட்டமாய்
சில சிந்தனைகள்
வெளியேறத் துடிப்பது இயல்பின் வட்டம்
அதிலேயே நீந்த சொல்கிறது
கற்பனையின் உச்சம்
நிதர்சனத்தை உணர்வது
அமைதி மட்டுமே-
You don’t need to see the whole path
just trust your next step enough to take it with purpose.-