ஜெயபிரியா சம்பந்தம்   (மொழியாயினி)
87 Followers · 89 Following

read more
Joined 28 January 2019


read more
Joined 28 January 2019

இருள் கலைந்திடாத
காலை பொழுதின்
தென்றலில்,
சிறு பறவைகளிட்ட
ஓசையை
செவிமடுத்ததும்,

இயற்கை சங்கமித்த
இசை நிகழ்ச்சியெனவே
நினைத்து கொண்டேன்!

-



தோல் சுருங்கி
நரைகள் நிறைந்தவள்
தள்ளாத வயதிலும்
தனியே வசிப்பவள்
வெறுங்கையுடன்
காண சென்றாலும்
எப்போதும் என்னை
வெறுங்கையுடன்
அவள் அனுப்பியதில்லை
எனைக் கண்டதும்
பொக்கைப் பற்கள் காட்டி
அவள் முதிர்ந்த முகம்
தெளிக்கும் புன்னகைக்கு
ஈடிருந்ததில்லை இதுவரை!

அவள்,
எனக்கு தந்ததிலும்
மிகை என் தந்தை!
அவள்,
ஆச்சரியமான கிழவி
என் ஆருயிர் ஆச்சி!

-



முன்னிரவின் மழை
இன்று விடிந்திருந்த
காலை பொழுதின்
காற்றில் ஈரமாகி
எனை தீண்டையில்
எழுந்த குளிர்,

அவன் பார்வை
தரும் சிலிர்ப்பை
ஒற்றது!!

-



இரவு வானில்
கடந்து சென்றிருந்த
கார் மேகங்கள்
லேசாய் தூரியப் போதும்
சில விண்மீன்களை மட்டும்
மறைக்காமல் மினுக்கிய படி
கண்ணில் தென்பட
விட்டிருந்தது தான்
இன்று என்
மன மகிழ்விற்கு
கிட்டிய ஒற்றை காரணம்!!

-



கற்கும் ஒவ்வொரு
புது வார்த்தையும்
சேமித்து தான்
வைக்கிறேன்
காதல் கவியில்
சேர்த்தெழுதி
உனக்கு அனுப்பிட!!

-



மழை நனைத்த
தலை முடியினை
நீ உலர்த்துகையில்
நீர் குமுழியொன்று
என் மேல் பட
சிலிர்த்து தான்
போனேன்!
நீர் துளியின்
ஈரத்தாலல்ல,
நிறைந்திருந்த
உன் ஸ்பரிசத்தால்
மட்டும் தானே!

-



She is on break
To get enough peace,
As she is broken
Into millions of piece!

-



மலைமீதான பாறைகளை
ஈரமாக்கி ஒழுகியோடுகையில்
அருவமற்ற நீரும்
அருவியானது போல்,
உணர்வுகளைக் கொட்டி
எழுதுகையில்
கலைந்த வார்த்தைகளும்
கலையாகி கவியென்றானது!

-



என் ஆயுட்காலம்
முடியும் வரை
தமிழெழுத்துக்களை முடிவேன்
வரிகளில் கவிதையாய்!!

-



உண்மையின் ஊற்றில்
உணர்வுகளை ஊற்றி
பல நூறு வரிகளை
இயற்றியதும்
அதில் சிலவற்றைப்
பாடியதும்
கலையில் தானும்
கலந்திடவே!

-


Fetching ஜெயபிரியா சம்பந்தம் Quotes