Balakarthik Balasubramanian Novelist   (Balakarthik Balasubramanian Novelist)
104 Followers · 4 Following

read more
Joined 20 September 2018


read more
Joined 20 September 2018

கவிதைக்கு மை திரட்ட பஞ்சமில்லை

-



ஒரு அகதியை போல உன் இதயத்தில் தஞ்சம் அடைந்த நான், இப்போது குடியுரிமை பெற்று மனதை பகிர்ந்து உன்னுடன் இணைந்து ஒவ்வொரு நாளையும் கொண்டாடி தீர்க்கிறேன்

-



அவன் சுதந்திரமாக கருவிழி எனும் குளத்தில் விழுந்து, நீச்சல் அடித்து கண்களில் வலம் வர, அதற்கு பாதுகாப்பாய் முள் வேலி (இமை முடி) போட்டு வைத்தேன்

-



கவிதை பெட்டகம் அவள்
-------------------------------
மறந்து போன கவிதை
எழுதும் பழக்கத்தால்
மூளை மழுங்கி,
இதயத்தை கூர் முனையால்
குத்தி குடைந்து
என்னவளின் முகம் பார்த்து
மீண்டும் எழுத துடிக்கிறது.

-



கண்ணுல நீர் இருக்க வரைக்கும் தான் அது சொட்டும். சுரக்க நீர் இல்லன்னு நினைச்சு பாரு, அதுதான் உனக்கு கிடைக்குற அனுபவமா லைஃப்ல நிச்சயம் இருக்கும்.

-



வாடிக்கையாளராக வந்த அந்தப் பட்டாம்பூச்சி செடியைச் (ஷாப்பிங் மால்) சுற்றி பார்த்து கடைசியில் தேனைப் பெற்றுக்கொண்டு பறந்து செல்கிறது...

-



இங்கே சூழ்நிலைகள் நமக்கு தகுந்தாற் போல் அமைவதில்லை. மாறாக, சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நீ மாறி கொள்ள பார். அதுவே புத்திசாலித்தனம்.

-



மரக்கிளையின் கழுத்தைத் தன் கால்களால் நெரித்து வாழும் பறவைகள்

-



கொரோனா வைரஸின் மரண வாக்குமூலம்
-------------------------------------------------------
மன்னிக்க வேண்டும் இறைவா! மனிதனை மனிதனாக என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் திரும்புகிறேன். தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

-



சொல்ல மறந்த கவிதை
----------------------------------------------------
அவளைக் கண்டதும் உறைந்து போன எழுத்துக்கள், வார்த்தையாய் உருமாற மறுத்து அடம்பிடித்து அப்படியே தொண்டையில் நின்றுக்கொண்டது.

-


Fetching Balakarthik Balasubramanian Novelist Quotes