Balabarathi   (G.Balabarathi)
144 Followers · 93 Following

Joined 14 October 2017


Joined 14 October 2017
8 MAR AT 7:30

It's important for men
to understand that women don't exist
to enhance men's identity, reputation,
health, wealth, power, and glory.
They have their own lives that encompass
all of these aspects.

Women are not servants
meant to work for the
advancement of men.

In our patriarchal society,
women are often pressured to rely
on men in the name of family,
which is often justified
as a cultural norm.
Happy Women's Day

-


27 FEB AT 23:28

The scars I bear
tell the story of the battles
I have fought against my fate.

-


19 FEB AT 1:15

விழுந்துகொண்டே இருக்கிறாய் 
என வருந்தாதே
விதைகள் யாவும் 
விழுந்து தான் முளைக்கின்றன
மரங்களாக. . .

-


7 SEP 2023 AT 10:14

இருவர் மனமும் இணைந்த பயணத்தில்
இன்பம் நிறைந்திட!
புது புது வெற்றிகள் வாழ்வில் 
தினம் உதயமாகிட!
சொந்த பந்தம் சூழ்ந்துகிட்டும் மகிழ்ச்சி
என்றும் மனையில் தங்கிட!
குறையாத செல்வம் குவிந்து
மேலும் குடும்பம் சிறந்திட!
மகிழ்ச்சியால் மனம் குளிர்ந்து
மனை மங்கலம் சூடிட!
இருவரும் நிறைவான ஆயுளில்
நலம் பெற்று
பெருவாழ்வு வாழ்ந்திட இறைவனை 
வேண்டுகிறோம்.

-


5 SEP 2023 AT 6:48

Dear Teachers,
A great teacher not only teaches but also inspires. Thank you for being the source of inspiration and motivation in my educational journey.
Happy Teacher's Day!


-


31 JUL 2023 AT 23:42

அகமருடம் கோடி செய்தும்
அகம் புகுந்தும், உள் கிடந்தும்
அகத்தானை அறியாத-வாக்கனாகி
வாதகேது போலுணர்ந்தேன்!
பாசநாசம் செய்பவன்
பார்வையற்ற வாழ்க்கையில்
காக்கன் போக்கனாக்கிப் பார்த்து
காலம் என்னை வதைப்பினும்,
சிங்கநாதம் போல் எழுந்து
சீறிப்பாயும் வலுமையுண்டும்,
தக்கரம் அறுக்குமெந்தன்-மெய்
ஞானம் கொண்டறுத்த போதிலும்,
என்ன இந்த வாழ்க்கையென்று
எண்ணி எண்ணி வாடினேன்!
ஏதும் ஏதும் யாதும் கொண்டும்
என்னில் இல்லை
என்னை வெல்லும் வீரமே,
என்னையிழந்து, என்னையறிந்து
என்னை எங்கு தேடுவேன்!
மன்னை பொன்னை
நம்புமிந்த மானுடக்
குசக்கலத்தினடுவிலே
வந்த வழி யான் மறந்து
வாடி நின்று பாடினேன்.

-


10 JUN 2023 AT 8:53

வெறுப்போ, பகையோ, துரோகமோ
புரியாமல் செய்தாரா,
புரிந்துகொண்டு கடந்து போ!
தெரிந்தே செய்தாரா,
அமைதியாய் விலகிப் போ!
கேடு செய்ய நினைத்தாரா,
நன்று கருதி நகர்ந்து செல்!
யார் என்ன தீங்கு செய்தாலும்
உன் எண்ணத்தைச் சுத்தமாய் வை!
அதுவே யாவரிடத்தும் - உன்னைக் 
காக்கும் கேடயமாய் நிற்கும்!
யாரிடத்திலும் நியாயம் கேட்காதே!
தெரிந்தா தெரியாமலா
புரிந்தா புரியாமலா என்பதைப்
படைத்தவன் பார்த்துக்கொள்வான்.
அவனைவிட நீ ஒன்றும் சிறந்த
நீதியரசனாகிவிட முடியாது!

-


23 APR 2023 AT 0:01

கண்ணிருந்தும் தெரியாமல்
காதிருந்தும் கேட்காமல்
மண்ணிற்குள் பொன்னைத் தேடி
மாபெரும் கோட்டை கட்டி
விண்ணிற்கும் தெரியாமல்
 காட்டிற்குள் தவமிருக்க 
கட்டெறும்பும் எமனாகும்
காத்திருப்பும் விசமாகும்
காலங்களில் கீரலிட்டும்
வேசங்களால் மருந்தைவிட்டும்
காய்ந்தபின்னும் கரையாத
தழும்புக்குள்ளே ஒளிந்திருக்கும் 
வரலாற்றுக் கேள்விக்கு 
நெருங்கும் நேரம்
ஒன்றே பதிலாகும்.

-


12 APR 2023 AT 8:22

சில நேரங்களில்
சில இடங்களில்
உன் திறமைகளை மறைத்து வைத்துக்கொள்
இல்லையென்றால்
உன் திறமை
தேவையானவர்களுக்கு 
பயன்படுத்தப்படாமல்
சிலரின் தேவைக்காகச்
சுரண்டப்படும்

-


11 APR 2023 AT 6:18

நண்பனோ
பகைவனோ
துரோகியோ
எப்போது ஒருவன்
கெட்டுப்போக வேண்டும் என
எண்ணுகிறாயே
அப்போதே உன்
மனம் கெட்டு
மனிதம் கெட்டு
வாழ்க்கையும் கெட்டுப்போக
தொடங்கிவிடுகிறது

-


Fetching Balabarathi Quotes