Akshaya Venkat  
524 Followers · 105 Following

read more
Joined 25 August 2018


read more
Joined 25 August 2018
29 SEP 2018 AT 19:23

You know you have had it enough,
when you feel so broken inside that your heart wants to cry, but your eyes have run out of tears... You just slump in there staring at the wall

-


10 NOV 2021 AT 13:43

The day I decided to stop writing about pain was the day I stopped writing…

-


15 SEP 2020 AT 12:33

அவன் முகம்
கண்முன்னே துளிர்த்தது
சிவ பூஜையில்
இன்னுமோர் கரடி

-


14 SEP 2020 AT 23:32

Writers are
People who often find themselves amidst a brewing storm,
a stirring tide and
a heavy rain,
with the only way out
through the words they write...

-


14 SEP 2020 AT 23:15

நினைவில் வாழும் காதல்
நரகத்தின் செல்லப் பரிசு...
கடந்த பிழைகளை
அழகூட்டிக் காட்டும்
சண்டையை ஊடலென மாற்றும்
சிரிப்பினை சிறப்பூட்டிக் காட்டும்
இல்லாததை இருந்ததுபோலும்
இருந்தவை எல்லாம் இனியவை போலும்
பொல்லா நினைவது உன்னை
ஒரு பாடு படுத்தி விடும்...

-


14 SEP 2020 AT 22:41

பொன்போலே கைமாறி
சுழல்வது
தான் வாழ்க்கையோ?
புது உறவுகள் மலர்வதுவும்
மகிழ்வு தான் - எனினும்
பழங்கூட்டைப் பிரிந்து
பரவும் பந்தம்
பிழையல்லவா..?
பழங்கதையை புரட்டாதே
பெண்ணே
புதுயுக காலத்தில் என்கிறாய்..
காலம் மாறினாலும்
கண்கள் மாறவில்லை..
நடப்பு வேறுபட்டாலும்
நாட்கள் வேறுபடுவதில்லை..
இந்நாளில் இது
அநியாயப் பேச்சு
என்கிறாயா..?
ஆமெனில்
ஆணே நீ செய்யேன்
புது வீடு புகுதல்...

-


13 SEP 2020 AT 23:53

மழை
நம் நிலமும்
நாட்குறிப்பு புத்தகமாகிறதோ,
நீல வானின் மையிடை...?
சிரித்து உதிர்ந்தவை
கனத்து விழுந்தவை
காமம் கரந்தவை
காதல் தந்தவை என
அந்நாளின் நிகழ்வுக்கு
ஏற்றாற்போல்
குறிப்பின் நிறம் மாறுமோ..?
மையின் கனம் மாறுமோ..?
ஒவ்வொரு மழைத்துளியின்
அணுக்குள்ளே - வானின்
ஒரு கதை மறைந்துள்ளதோ..?
ஒவ்வொரு பனித்துளி
மணிக்குள்ளே - அவளின்
ஒரு படம் உறைந்துள்ளதோ...?

-


12 SEP 2020 AT 23:58

It's never the challenges
But laziness
that always gets you

-


11 SEP 2020 AT 23:35

கண்ணன் தன் காதலன் என இவள் குழைந்தாள்
கண்ணன் தன் காந்தன் என அவள் கனிந்தாள்
இவள் பித்துமல்ல அவள் பேதையுமல்ல - நிஜத்தில்
ஆயிரம் கோபிகைகளுக்கு
ஆயிரம் கண்ணனாம்
ஆயிரம் காதலாம் - அதுபோல்
உன் காதல் பழகி
உன் சித்தாந்தம் ஏற்று
உன் வாழ்வைப் போற்றி
உன்னை மனதில் முடியும்
பலவாயிரம் கண்ணம்மாக்களுக்கு
நீ தமிழ்க் கண்ணன்
காதலன்
பாரதி

-


10 SEP 2020 AT 22:58

கால வெள்ளத்தின் ஓடையினில்..
விழிகள் மூடி கனவினிலும்,
இமைகள் அகலாது நினைவினிலும்
கனவுகள் வருமென
காத்திருக்கிறேன்,
கால வெள்ளத்தின் ஓடையினில்...

-


Fetching Akshaya Venkat Quotes