"வெறித்து பார்க்காதே வெட்டி விடுவேன்"
மிரட்டி கொண்டு இருந்தவளை
தலையில் தட்டினாள் அம்மா,
சிரித்து கொண்டார் அப்பா,
அத்தனை அவஸ்தையையும்
அப்பாவி போலவே பார்த்தது
தட்டிலிருந்த இட்லி...
"நடிக்காதே", என்றபடியே எடுத்து
கடித்தேன் நான் அந்த வெள்ளை வேதனையை.
- சாரா ஜோதி
-