25 MAY 2017 AT 22:09

பட்டு இதழ் வெய்த பதப்பூவே-நினைவில்
பட்டவுடன் சுகந்தரும் இதப்பூவே!
கண்ட கணமே கொய்து உருகுலைத்து,
மடல் கடித்து சுவை பெற்ற வயது கழிந்து
உன் வண்ணப் பட்டுடல் தொட்டு தொட்டு
சிலிர்த்து சுகம் பெறும் வயதடைந்தேன்.
நான்,
வண்டாக ஜனித்திருந்தால்,
பதமாக பக்கம் வந்து
இதமாக தேனிதழ் வருடி
படாமல் பட்டு தொடாமல் தொட்டு
சுவைத்தேன் பருகி நிதம்
சுகச்சேவை புரிந்திருப்பேன்!
இல்லை,
துளிமழையென பிறந்திருந்தால்,
முகில் முட்டி திறந்து
உன் எழில் இதழ் நனைத்து
உனக்குள் வடிந்து உயிர் தடவி
சூல் மூழ்கி தேனூற்றெடுத்திருப்பேன்!
அதிகபட்சம்,
மென் காற்றாயிருந்தால் கூட,
என் முலக்கூறின் விளிம்பு மட்டும்
உன் பூமணம் கரைத்து
முகர்ந்து முக்தி பெற்றிருப்பேன்!
பாவம் பெண்ணாய் போனேன்!
உன்னை குழல் சேர்த்து
தன் எழில் ஏத்தும்
பாவ பட்டப் பெண்ணாய் போனேன்!

- Lithiya